உக்ரைன் போரின் அமைதி குழுவைச் சேர்ந்த மூவருக்கு விஷம் வைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கும் மேலாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் பல்வேறு நாடுகள் இந்தப் போரினை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ள சிலரை குறிவைத்து பாய்சன் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரஷ்யாவைச் சேர்ந்த கோடீஸ்வர தொழில் அதிபர் ரோமன் அப்ரமோவிக் உக்ரைன் அரசின் வேண்டுகோளை ஏற்று அமைதி பேச்சில் பங்கேற்று அந்நாட்டிற்கு ஆதரவாக பேசி வந்துள்ளார்.
இதற்கிடையில் வால் ஸ்ட்ரீட் ஜெனரல் செய்தி நிறுவனம் கூறியதாவது, “கடந்த மாதம் தொழிலதிபர் ரோமன் மற்றும் உக்ரைன் அமைதி குழுவைச் சேர்ந்த இரண்டு பிரதிநிதிகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதில் மூன்று பேருக்கும் கண்கள் சிவந்து, முகம் மற்றும் கைகளில் தோல் உரிய தொடங்கியது. மேலும் இவர்களுக்கு உக்ரைன் தலைநகர் கீவில் நடத்தப்பட்ட அமைதி பேச்சு வார்தையின் போது விஷம் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்பொழுது அவர்கள் உடல்நிலை சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சமாதான பேச்சுவார்த்தைக்கு கெடுதல் நினைத்து ரஷ்ய நாட்டை சேர்ந்த சில முயற்சித்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்” என்று தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து புலனாய்வு அதிகாரி கிறிஸ்டோ குரோசெவ் இந்த தாக்குதலுக்கு ரஷ்ய படையைச் சேர்ந்தவர்கள் சிலர் இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.