Categories
உலக செய்திகள்

துருக்கியில் பரவிய காட்டுத்தீ.. அணைக்கச் சென்ற ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது.. 8 பேர் உயிரிழப்பு..!!

துருக்கியில் தரையிறங்கிய ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளாகி 8 நபர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியில் காட்டுத்தீ பரவியுள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்த, ரஷ்யாவில் இருந்து பி-200 வகை தீயணைப்பு விமானம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் ரஷ்யாவின் ராணுவத்தை சேர்ந்த விமானிகள் ஐந்து பேரும், துருக்கி நாட்டை சேர்ந்த நிபுணர்கள் மூன்று பேரும் பயணித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், விமானம் துருக்கியின் அடானா மாகாணத்திற்கு அருகில் தரை இறங்கியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 8 நபர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Categories

Tech |