உக்ரேன் நாட்டில் இருக்கும் ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிகள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்ய படைகள் உக்ரேன் நாட்டின் மீது மூன்று மாதங்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் நாட்டில் இருக்கும் மருத்துவமனைகள், வீடுகள், பள்ளிக்கூடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மக்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தும் நோக்கத்தோடு தாக்குதல் மேற்கொள்வது போர்குற்றம்.
எனினும், கட்டிடங்களை காட்டிலும் பள்ளிக்கூடங்கள் நூற்றுக்கணக்கில் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன என்று நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். செர்னிஹிவ் என்னும் நகரத்தில் இருக்கும் 35 பள்ளிகளில் 7 பள்ளிகளில் மட்டும் தான் தாக்குதல் நடத்தப்படவில்லை. மேலும் அந்த 35 பள்ளிகளில் மூன்று பள்ளிகள் மொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டது.