ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் உக்ரைன் நாட்டின் சிறுவர்களுக்கு உதவுவதற்காக தன் நோபல் பரிசை விற்பனை செய்திருக்கிறார்.
ரஷ்ய நாட்டின் டிமிட்ரி முரடோவ் என்னும் பத்திரிகையாளர், அதிபர் விளாடிமிர் புடினின் நிர்வாகத்தை கடும் விமர்சனம் செய்பவர். ரஷ்யாவில் பேச்சுரிமையும் பத்திரிக்கை சுதந்திரத்தையும் பாதுகாக்க பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். இதற்காக கடந்த வருடத்தில் அவர் நோபல் பரிசை வென்றார்.
அவருக்கு தங்க பதக்கம் மற்றும் 5 லட்சம் டாலர் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ரஷ்யா மேற்கொண்ட போரால் உக்ரைன் நாட்டில் பாதிப்படைந்த சிறுவர்களுக்கு உதவி செய்வதற்காக தான் வென்ற தங்கப் பதக்கத்தை அவர் விற்பனை செய்ய தீர்மானித்திருக்கிறார்.
அதன்படி தன் தங்கப்பதக்கத்தை அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் ஏலம் விட்டதாகவும் அதில் பெறப்படும் பணத்தினை நேரடியாக யுனிசெப் அமைப்பிற்கு அனுப்பி விடுவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் பரிசுத் தொகையாக அவருக்கு வழங்கப்பட்ட 5 லட்சம் டாலர்களையும் யுனிசெப் அமைப்பிற்கு கொடுப்பதாக கூறியிருக்கிறார்.