ரஷ்ய நாட்டின் போர் விமானம், தங்களின் வான் எல்லையில் நுழைய முயற்சித்த நார்வே விமானத்தை விரட்டியதாக தெரிவித்துள்ளது.
ரஷ்ய வான்வெளி கட்டுப்பாட்டு அறை, நேற்று Barents கடலின் மேற்பரப்பில் ஒரு விமானம் தங்கள் எல்லைக்கு வந்துகொண்டிருப்பதை கண்டறிந்துவிட்டது. எனவே, அந்த விமானத்தை அடையாளம் காண்பதற்காகவும், தங்கள் எல்லைக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்காகவும், ரஷ்யா, வடக்கு கடற்படையினுடைய, வான் பாதுகாப்பு படையின் போர் விமானமான மிக் -31-ஐ அனுப்பியிருக்கிறது.
இந்த போர் விமானக்குழுவானது, எல்லைக்கு வந்துகொண்டிருக்கும் விமானம், நார்வே விமானப்படையை சேர்ந்த, ஆர் -3 சி ஓரியன் பேஸ் ரோந்து விமானம், என கண்டறிந்தது. அதனையடுத்து, உடனடியாக அந்த விமானத்தை தடுத்ததோடு, Barents கடலுக்கு வெளியில் விரட்டியதாக ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நார்வேயின் இராணுவ விமானத்தை, எல்லையிலிருந்து வெளியேற்றிய பின், ரஷ்யாவின் போர் விமானம் திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.