Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளின் கொடூரச்செயல்… தெரியப்படுத்திய ரஷ்யருக்கு நேர்ந்த நிலை…!!!

உக்ரைனில் நடந்த கொடுமைகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்திய ரஷ்யாவை சேர்ந்த ஒரு கலைஞருக்கு 10 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்படவிருக்கிறது.

ரஷ்ய நாட்டில் இருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 31 வயதுடைய Alexandra Skochilenko என்னும் கலைஞர் உக்ரைன் நாட்டின் மரியு போல் நகரத்தில் ரஷ்யப் படைகளின் காட்டுமிராண்டித்தனம் குறித்து ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

Alexandra Skochilenko ஒரு சூப்பர் மார்க்கெட்டின் பொருட்களுக்கான விலைப்பட்டியலில் உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில் ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு அஞ்சி மறைந்திருந்த 400 அப்பாவி மக்கள் மீது வான்வழித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது குறித்து பதிவு செய்திருக்கிறார்.

இந்நிலையில் அவர் பொய்யான தகவல்களை பரப்பினார் என்று குற்றம் சாட்டிய ரஷ்ய அரசு விசாரணை காவலில் வைக்க உத்தரவிட்டது. மேலும், நீதிபதி Alexandra Skochilenko மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உண்டாக்கும் விதத்தில் கருத்துக்களை பதிவிட்டதாக கூறியிருக்கிறார். எனவே அவருக்கு 5-லிருந்து 10 வருடங்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |