Categories
உலக செய்திகள்

உக்ரைனில் கொடூரம்… சிறுமியை சித்ரவதை செய்து கொன்ற ரஷ்யப்படை… கதறி அழுத தாயார்…!!!

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அவரின் தாய் பல நாட்களாக தேடி வந்த நிலையில், சிறுமி கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகத் தெரிய வந்திருக்கிறது.

உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் 47-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் பல முக்கிய நகரங்களை நிலைகுலையச் செய்த ரஷ்ய படைகள், பெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புச்சா நகரத்தில் 16 வயதுடைய  கரீனா என்ற சிறுமி ரஷ்ய படையினரால் கொடூரத்தை அனுபவித்திருக்கிறார்.

சிறுமியை, ரஷ்ய வீரர்கள் சித்ரவதை செய்து தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். கரீனாவை அவரின் தாய் தேடி வந்த நிலையில், அலங்கோலமான நிலையில் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு சிறுமி கொல்லப்பட்டது தெரியவந்தது. சிறுமியின் உடல் சில மணிநேரங்களுக்கு முன்பு அவரின் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தன் மகளின் உடலை பார்த்து அவர் கதறி அழுதது காண்போரின் மனதை நொறுக்கியது.

Categories

Tech |