உக்ரைன் நாட்டின் வடக்கு பகுதியிலிருந்து ரஷ்யப் படைகள் மொத்தமாக வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து நாற்பது நாட்களை தாண்டி கடுமையாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளை ரஷ்யப் படைகள் குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டு வந்தன.
உக்ரைன் படைகளும் அதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யப் படையினர் பல இடங்களில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், உக்ரைன் நாட்டின் வடக்கு பகுதியிலிருந்து மொத்தமாக வெளியேறிவிட்டதாக பிரிட்டன் ராணுவ உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.