Categories
உலக செய்திகள்

வர்த்தக நட்பை பலப்படுத்த…. இந்தியாவிற்கு வரும் ரஷ்ய அமைச்சர்…!!!

ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருப்பதால் இந்தியாவுடன் வர்த்தக நட்பை பலப்படுத்த விரும்புவதாக கூறப்படுகிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா, ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. இதன் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன. இந்நிலையில், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான செர்ஜி லாவ்ரோவ், ஆசியாவிற்கு சுற்றுபயணம் சென்றிருக்கிறார்.

அவர் இன்று டெல்லிக்கு வருகை தர உள்ளார். இதற்கிடையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. இது பற்றி பேச்சுவார்தை நடத்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான திலீப் சிங், இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சரான லிஸ் ட்ரஸ் போன்றோரும் இன்று டெல்லிக்கு வர இருக்கிறார்கள்.

Categories

Tech |