Categories
உலக செய்திகள்

உக்ரைனில் நடப்பதற்கு நீங்கள் தான் பொறுப்பு…. நேட்டோவை கண்டிக்கும் ரஷ்யா…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டிற்கு நேட்டோ நாடுகள் ஆயுதங்கள் வழங்குவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

ரஷ்யப் படைகள் தீவிரமாக உக்ரைன் நாட்டில் போர் தொடுத்து வருகின்றன. உக்ரைன் படைகள் இதனை தடுக்க போராடிக் கொண்டிருக்கின்றன. எனவே, அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆயுத உதவி செய்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய அரசு, நேட்டோ நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறது.

அந்நாட்டின் நாடாளுமன்ற கீழ் சபை தலைவரான வியாசெஸ்லாவ் வொலோடின் நேற்று தெரிவித்ததாவது, அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் வழங்குகிறது மற்றும் கூலிப்படைகள் அனுப்புகிறது. இது நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மேலும் உக்ரைன் நாட்டில் நடக்கக்கூடிய, மக்கள் உயிரிழப்பிற்கும், வெளியேற்றத்திற்கும்  வாஷிங்டனும், நேட்டோவும் தான் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |