ஜெர்மன் அரசு, உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிப்பதை அந்நாட்டில் வாழும் ரஷ்ய மக்கள் எதிர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எந்த நாட்டில் வசித்தாலும் ரஷ்ய நாட்டை சேர்ந்த தொலைக்காட்சிகள் தெரிவிப்பதை மட்டும் பார்த்துக் கொண்டு, அந்நாட்டின் அரசாங்கம் கூறுவதை மட்டுமே நம்பக்கூடிய மக்களும் இருக்கிறார்கள். அதன்படி, ஜெர்மன் நாட்டில் வசிக்கும் ரஷ்யாவை சேர்ந்த 2000 மக்கள் ஒன்று கூடி உக்ரைன் நாட்டிற்கு தெரிவிக்கும் ஆதரவை நிறுத்துமாறும், ரஷ்ய நாட்டின் மீது விதிக்கப்படும் தடைகளை கைவிடுமாறும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
நேற்று முன்தினம் ஜெர்மன் நாட்டின் Cologne என்னும் நகரத்தில் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இது ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், மறுபுறம் இவர்களுக்கு எதிராக உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரு கும்பல் அதே நகரில் போராட்டம் நடத்தியிருக்கிறது. ஜெர்மன் நாட்டில் ரஷ்ய பின்னணி உடைய மக்கள் 3 மில்லியன் பேர் வசிக்கின்றனர்.