ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் ரஷ்யாவிற்கு சென்றிருக்கும் நிலையில் இன்று அதிபர் விலாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது இரண்டு மாதங்களை கடந்து போர் தொடுத்துக்கொண்டிருக்கிறது. எனவே, ரஷ்ய வெளியுறவு அமைச்சரான செர்கை லாவ்ரோவுடன் ஐ.நா பொதுச் செயலாளர் போரை நிறுத்துவது தொடர்பில் விவாதித்திருக்கிறார். அதன்பின்பு பத்திரிக்கையாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, போரை முடித்து பேச்சுவார்த்தைகளின் மூலம் சுமூக தீர்வு காண ஐ.நா சபை அதிக முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது.
இதன் மூலமாக போரில் பாதிப்படைந்த மக்களின் துயரங்களை குறைக்க முடியும் என்று கூறியிருக்கிறார். மேலும், போரால் நிலைகுலைந்து போன மரியுபோல் நகரத்திலிருந்து மக்களை வெளியேற்ற மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவிகள் செய்யவும் தயாராகவுள்ளதாக கூறியிருக்கிறார்.