ரஷ்ய அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கத்தில் கிளாசை பரிசாக வழங்கியுள்ளார்.
சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் ரஷ்ய அதிபர் புதினும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்துக் கொண்டனர். சந்திப்பை முடித்துவிட்டு இரு நாட்டுத் தலைவர்களையும் ஸ்விட்சர்லாந்து அதிபர் மாளிகைக்கு வரவேற்றார். இதில் ரஷ்ய அதிபரும், அமெரிக்க அதிபரும் இரு நாட்டு சிக்கல்களை பேசி தீர்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் புதினுக்கு 23 கேரட் தங்கத்தினாலான Randolph – பிராண்ட் சன் கிளாஸ்-ஐ அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்த சன் கிளாஸ் Concorde ஸ்டைல் கண்ணாடி வகையை சேர்ந்தது.