ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின், எங்கள் நாட்டின் கடற்படையை எந்த நாட்டின் கடற்படையினாலும் வீழ்த்த முடியாது என்று ஆணவத்தோடு கூறியிருக்கிறார்.
ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின், நட்பு நாடுகள் பங்கேற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க்-ல் கப்பல்படையின் அணிவகுப்பு விழாவில் பங்கேற்றிருக்கிறார். அந்த சமயத்தில், பிற நாடுகளின் நீர்மூழ்கி கப்பல்களும், போர் கப்பல்களும் அணிவகுப்பில் பங்கேற்றது.
அப்போது, அணிவகுப்பு விழாவின் முடிவில் விளாடிமிர் புடின் பேசினார். அப்போது ரஷ்ய நாட்டின், கடற்படையை பற்றி பெருமையாக கூறினார். அதாவது, “எங்கள் நாட்டின் கடற்படைக்கு, கடலின் அடியிலும், மேல் பகுதியிலும் மற்றும் வான்வழியிலும் என்று எங்கு தாக்கினாலும், கண்டுபிடித்து, எதிர்களினால் தடுக்கவே முடியாத வகையில் பதில் தாக்குதல் நடத்தும் வலிமை இருக்கிறது” என்று எச்சரிக்கும் வகையில் கூறினார்.