ரஷ்ய நாட்டின் பணக்காரர்கள் அதிபர் விளாடிமிர் புடினின் ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக உக்ரைன் நாட்டின் உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. எனவே, ரஷ்யா மீது பொருளாதார தடைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ரஷ்யாவில் உள்ள அலிகார்க்ஸ் என்ற குழுவின் சொத்துக்கள் பல நாடுகளில் முடக்கப்பட்டிருக்கின்றன. இந்த குழு அந்நாட்டின் அரசை மறைமுகமாக கட்டுப்படுத்தும் அதிகாரமும், அரசாங்க முடிவுகளை தீர்மானிக்கக் கூடிய அதிகாரமும் பெற்றிருக்கிறது.
இந்நிலையில், இந்த அலிகார்க்ஸ் குழு, ரஷ்யாவில் அதிபர் புடினின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி மேற்கொண்டிருப்பதாக உக்ரைன் நாட்டின் உளவுத்துறை இயக்குனரான கைரிலோவ் கூறியிருக்கிறார். அதாவது, அதிபர் புடின் உக்ரைனில் போர் மேற்கொண்டதன் விளைவாக நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அலிகார்க்ஸ், அவரின் ஆட்சியை கவிழ்க்க தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, புடினுக்கு சாலை விபத்தை உண்டாக்கியோ, விஷம் கொடுத்து அல்லது நோயை உண்டாக்கியோ, விரைவாக அவரின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு அந்த குழு முயல்வதாக உக்ரைனின் உளவுத்துறை இயக்குனர் கூறியிருக்கிறார்.