Categories
உலக செய்திகள்

ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்கள் முடக்கம்…. பிரிட்டன் அரசின் அதிரடி தீர்மானம்…!!!

பிரிட்டன் அரசு, தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்களை முடக்கியிருந்த நிலையில், அதனை உக்ரைனிற்கு அளிப்பது குறித்து ஆலோசனை செய்து  வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 131 ஆம் நாளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச விதிமுறைகளை மீறிய ரஷ்ய நாட்டிற்கு பிரிட்டன், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்ய நாட்டை சேர்ந்த பணக்காரர்களின் சொத்துக்களை பிரிட்டன் முடக்கியிருந்தது. தற்போது, அவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களை உக்ரைன் நாட்டிற்கு அளிப்பது குறித்து பிரிட்டன் பரிசீலனை செய்து வருவதாக கூறப்பட்டிருக்கிறது. இது, ரஷ்ய பணக்காரர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |