உக்ரைன் நாட்டின் மிகவும் முக்கியமான உற்பத்தி நிலையமாக இருக்கும் வுஹ்லெஹிர்ஸ்க்-ஐ ரஷ்ய படையினர் ஆக்கிரமித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 5 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய படையினர் சமீப நாட்களாக வுஹ்லெஹிர்ஸ்க் என்ற மின் உற்பத்தி நிலையத்தை ஆக்கிரமிக்க முயன்று வந்தனர். அதன்படி, கடும் முயற்சி மேற்கொண்டு ரஷ்க படையினர் உக்ரைன் நாட்டின் வுஹ்லெஹிர்ஸ்க் மின் உற்பத்தி நிலையத்தை கைப்பற்றி விட்டார்கள்.
இந்நிலையில், உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியின் ஆலோசகராக இருக்கும் Oleksiy Arestovych கூறியுள்ளதாவது, இது தங்கள் நாட்டிற்கு சிறிய தந்திரோபா நன்மை என்று தெரிவித்திருக்கிறார்.