உக்ரைனை எதிர்த்து நடக்கும் போரில் ரஷ்ய படைகள், அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ள போர் பயிற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா, உக்ரைன் நாட்டை எதிர்த்து 70 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. உக்ரைனும் இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆயுத உதவிகளும் நிதிஉதவியும் அளித்து வருகின்றன.
இந்நிலையில் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர்களாக இருக்கும் லிதுவேனியா, போலந்து போன்ற நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் இருக்கும் பால்டிக் கடல் பகுதியில் அணு ஆற்றல் உடைய கண்டம் தாண்டி கண்டம் சென்று தாக்கும் ஸ்கேண்டர் ஏவுகணைகளை வைத்து ரஷ்ய படைகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
பயிற்சிக்குப் பிறகு, ரஷ்யப்படையினர் எதிரிகளின் பதில் தாக்குதலிலிருந்து தப்ப, தாக்குதல் மேற்கொண்ட பின் தங்களின் இருப்பிடங்களை மாற்றி கொண்டார்கள். இதேபோல ரசாயன வீச்சு, கதிரியக்கம் போன்ற தாக்குதல்களுக்கும், 100க்கும் அதிகமான ரஷ்ய படையினர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.