உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் அந்நாட்டு சுற்றுலா பயணிகளின் அனுமதிக்கு தடை விதிப்பதற்கு வலியுறுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் ஆறு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. எனவே, ஐரோப்பிய ஒன்றியமானது ரஷ்ய நாட்டை செய்த சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பதற்கு வலியுறுத்தியுள்ளது. எனினும் இந்த திட்டத்திற்கு ஜெர்மன் நாட்டின் சேன்ஸலராக இருக்கும் ஓலாஃப் ஷோல்ஸ், தன் ஆதரவை தெரிவிக்க மறுத்துள்ளார்.
மேலும், இது ரஷ்ய நாட்டு மக்களுடன் நடக்கும் போர் கிடையாது. அந்நாட்டு அதிபருடன் நடக்கும் போர். ஐரோப்பிய ஒன்றியத்தில் நாம் மேற்கொள்ளும் எந்த தீர்மானமும் ரஷ்ய நாட்டிலிருந்து சுதந்திரமாக வெளியேற நினைக்கும் அந்நாட்டு மக்களுக்கு விளைவை ஏற்படுத்தக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு விசா தொடர்பான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசிக்கிறது. இது தொடர்பாக விவாதிக்க ஜெர்மன் விருப்பம் தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.