ரஷ்யாவின் ஜனாதிபதியான விளாடிமிர் புடின் பிரிட்டனுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின் உலக நாடுகளை எச்சரித்திருக்கிறார்.
ரஷ்ய அரசு, கடந்த ஜூன் மாதத்தில் தங்கள் கடல் பகுதிக்குள் சட்டத்திற்கு புறம்பாக பிரிட்டன் போர்க்கப்பல் புகுந்ததாக தெரிவித்தது. மேலும் எச்சரிப்பதற்காக அதன்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி, விரட்டி அடித்ததாகவும் தெரிவித்திருந்தது. எனினும் ரஷ்யாவின் இந்த அறிக்கையை பிரிட்டன் அரசு மறுத்திருந்தது.
மேலும் தங்கள் போர்க்கப்பல்களை யாரும் தாக்கவில்லை என்றும் கூறியது. ஆனாலும் சில தினங்கள் கழித்து ரஷ்ய அரசு, தாங்கள் நினைத்திருந்தால் பிரிட்டன் போர்க்கப்பலை கடலில் மூழ்கச்செய்திருப்போம் என்று எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், ரஷ்ய ஜனாதிபதி, கடற்படை நாள் அணிவகுப்பில் உரையாற்றியபோது, நீருக்கு அடியில், மேல் பகுதியில் மற்றும் வான்வழியிலும் எதிரிகளை கண்டறியக்கூடிய திறன் எங்களிடம் இருக்கிறது. தேவைப்படும் பட்சத்தில் எதிரிகளை எதிர்த்து, தடுக்கவே முடியாதவாறு தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்திருக்கிறார்.