கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று சுமார் 180 நாடுகளை தாக்கியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 10 ஆயிரத்து 495 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், உலகளவில் கொரோனாவில் இருந்து குணாமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 43 ஆயிரத்து 420 ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகள் என்றால், அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆகும். அதிகபட்சங்க பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் இதுவரை 10 லட்சத்து 95 ஆயிரத்து 304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில், 63,871 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 155,737 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கொரோனாவால், அதிபர்கள், பிரதமர், முக்கிய நிர்வாகிகளும் பாதுகாத்து வருகின்றனர். அந்த வகையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அவர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.
அந்த வரிசையில் ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு கொரோனா தொற்று எப்படி பரவியது என்பது இன்னும் தெரியவில்லை. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 06 ஆயிரத்து 498 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,073 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11 ஆயிரத்து 619 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.