Categories
உலக செய்திகள்

#RussiaUkraineConflict : ப்ளீஸ் வேண்டாம்!…. “ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க”…. புடினுக்கு ஐ.நா வேண்டுகோள்….!!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் ரஷ்ய படைகள் தாக்க தொடங்கியுள்ளன. அதோடு மட்டுமில்லாமல் ரஷ்ய படைகளை மறிப்பவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தவும் ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்த இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அமைதியான முறையில் தீர்வு காண வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |