Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்கள் உடல்கள் சென்னை கொண்டுவரப்பட்டன…!

ரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர்கள் நான்கு பேரின் உடல்கள் டர்க்கி வழியாக இன்று சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர்.

ரஷ்யாவில் வோல்வோகிராட் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மேற்படிப்பு பயின்று வந்த கடலூரைச் சேர்ந்த ஆர்.விக்னேஷ், திருப்பூரைச் சேர்ந்த மோகமத் ஆஷிக், சேலத்தைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் மற்றும் மருத்துவப் படிப்பு படித்த சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன் லிபாப் ஆகியோர் கடந்த எட்டாம் தேதி வோல்கா ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

4 மாணவர்களின் உடல்களும் ரஷ்யாவிலிருந்து டர்க்கி வழியாக டர்க்கி ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் மூலம் இன்று சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதையடுத்து உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நான்கு மாணவர்களின் உடல்களும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Categories

Tech |