Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க திட்டம்…!!

ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் 5  தடுப்பூசியை இந்தியாவில் 100 பேரிடம் பரிசோதிக்க இந்திய மருந்து தரகட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா வைரசுக்கு ஸ்புட்னிக் 5 என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக முதன் முதலில் அறிவித்த ரஷ்யா, அந்நாட்டு மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து விட்டது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு இந்திய மருத்துவ தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் முதற்கட்ட சோதனை நடைபெற்ற போது ரஷ்யாவில் தடுப்பூசியை  செலுத்திய நபர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானதால் தடுப்பூசியின் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அண்மையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்5 தடுப்பூசி பரிசோதனையை இந்தியாவில் மீண்டும் தொடங்க டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு இந்திய மருந்து தரக்கட்டுப்பாடு ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் இந்தியாவில் 100 பேரிடம் ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை செலுத்தி இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இரண்டாம் கட்ட பரிசோதனை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |