ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவால்னிக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸ் நவால்னிக்கு கடந்த வருடம் மர்மநபர்கள் விஷம் கொடுத்தனர். இதனால் சைபீரிய மருத்துவமனையின் முன்னாள் தலைமை மருத்துவரான முரகோவ்ஸ்கி தான் அவருக்கு சிகிச்சை அளித்துவந்தார். இந்நிலையில் அவர் திடீரென்று மாயமாகியுள்ளார்.
நேற்று வேட்டையாடுவதற்காக சென்ற முரகோவ்ஸ்கி அதன் பின்பு வீட்டிற்கு வரவில்லை என்று காவல்துறையினர் கூறுகின்றனர். மேலும் நவால்னி தொடர்பில் அந்த மருத்துவர் புடின் அரசுக்கு சாதகமாக செயல்படுகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் நவால்னியை மேல்சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு கொண்டு செல்வதை அவர் தாமதமாகப்படுத்தி வந்ததாக குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.