கொரோனா தொற்று பரவல் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளதால் முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக தலைநகர் மாஸ்கோவில் நடந்த 28 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் தற்பொழுது ரஷ்யாவில் இன்று முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் வீதிகளில் வழக்கம்போல சுற்றித்திரிந்து வருகின்றனர். மேலும் ஊரடங்கானது வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு வாரகால விடுமுறையை ரஷ்யா அரசு அறிவித்துள்ளது.