Categories
உலக செய்திகள்

கொரோனா வதந்தியால்…. ஆர்டி சேனல் நிறுத்தம்…. யூடியூப் இணையதளத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!

ரஷியாவுக்கு சொந்தமான ஆர்டி சேனலை நிறுத்தியதால் யூடியூப் சேவை முடக்கப்படும் என கூகுள் நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

ரஷ்யா அரசு தனக்கு சொந்தமான ஆர்டி(RT) என்னும் செய்தி தொலைக்காட்சியை ஆங்கிலம் மற்றும் பிரென்ச் மொழிகளில் ஒளிபரப்புகின்றது. அதோடு யூடியூப் இணையத்திலும் ஆர்டி சேனலை ஜெர்மன் மொழியில் ஒளிபரப்புகிறது. தற்போது ஜெர்மன் மொழியில் ஒளிபரப்பப்படும் ஆர்டி சேனலை யூடியூப் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ஆர்டி சேனலில் புதிய வீடியோக்கள் பதிவேற்றம் செய்ய முடியவில்லை.

இதனால் யூடியூப் நிறுவனத்திற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவில் யூடியூப் இணையதளம் முடக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து யூடியூப் நிறுவனம் கூறியதாவது, “ஜெர்மனியில் ஆர்டி சேனல் கொரோனா நோய்த் தொற்று குறித்து பொய்யான வதந்திகளை பதிவிட்டுள்ளது. இந்தச் செயல் யூடியூபின் கொள்கை முறைக்கு எதிராக உள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யாவின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை கடிதம் ஒன்று எழுதியுள்ளது. இந்தக் கடிதத்தில் “ஆர்டி நிறுவனத்திற்கு எதிரான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். இதனை மறுக்கும் பட்சத்தில் யூடியூப் சேவையினை பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ முடக்கப்பட வாய்ப்பு உள்ளது” என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கடிதம் குறித்து கூகுள் நிறுவனம் இதுவரை பதில் எதுவும் அளிக்கவில்லை.

Categories

Tech |