Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இரக்கமற்ற மனிதர்கள்….” யானையின் மீது எரியும் டயரை வீசி”… நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி..!!

யானை மீது ஏரியும் டயரை வீசிய பரபரப்பு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில மாதங்களாக ஆண் காட்டு யானை ஒன்று காயத்துடன் சுற்றி வந்தது. இதனை பிடித்த வனத்துறையினர் யானையின் காதில் காயம் இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் கடந்த 19ஆம் தேதி கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி அந்த யானையை பிடித்தனர். அந்த யானையை லாரியில் ஏற்றி சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் அந்த யானை உயிரிழந்தது. உயிரிழந்த யானையின்மீது டயர் வீசியது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/ThinBrownDuke26/status/1352565590712487943

தனியார் விடுதியை சேர்ந்த ஊழியர்கள் யானையை விரட்டுவதற்காக யானை மீது எரிந்த டயரை வீசியுள்ளனர். இதனால் அந்த யானையின் தலை மற்றும் காது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். மற்ற ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |