ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகணை அமைப்பை வாங்க முடிவு செய்திருப்பதாக துருக்கி அதிபர் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து துருக்கி அரசானது எஸ் 400 ரக ஏவுகணை அமைப்பை வாங்கி உள்ளது. இதனால் அமெரிக்க அரசானது தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தது. மேலும் ரஷ்யாவின் ஏவுகணையானது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என அமெரிக்கா கூறியிருந்தது. இதனால் அமெரிக்கா கடந்த ஆண்டு நேட்டோ கூட்டமைப்பின் உறுப்பு நாடான துருக்கியின் மேல் பொருளாதார தடையை விதித்திருந்தது.
இந்நிலையில் துருக்கி அரசானது மேலும் ஒரு எஸ்400 ரக ஏவுகணை அமைப்பை ரஷ்யாவிடம் இருந்து வாங்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அதிபர் தாயீப் எர்டோகன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர் துருக்கி அரசானது எப்-35 ரக விமானத்திற்காக 1.4 பில்லியன் டாலர்களை அமெரிக்காவிற்கு அளித்த பிறகும் கூட அவர்கள் இன்னும் அதனை எங்களிடம் ஒப்படைக்க வில்லை என்றும் கூறியுள்ளார்.