எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகம் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வடக்கு மாவட்ட பொது செயலாளர் ஹிதாயத்துல்லா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டத்தில் செயலாளர் அன்வர் பாஷா, பொருளாளர் ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் துணை தலைவர் அப்துல் சத்தார் வரவேற்று பேசினார். இந்த போராட்டத்தில் பெட்ரோல், கேஸ் விலை உயர்வு, நூல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் செயற்குழு உறுப்பினர் சஜித்கான் தொகுப்புரை ஆற்றினார். இதனைதொடர்ந்து தெற்கு தொகுதி செயலாளர் சேக் அபுதாகிர் கண்டன உரையாற்றினார்.