Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆம்..! ஸ்டாலின் உள்ளே கொண்டு வந்தாரு… ஆளுநர் சட்டப்படி தான் நடக்கணும்… ரஜினிகிட்ட கேட்க சொன்ன டி.ஜெ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  அதிமுக ஆட்சியில் குட்கா அதிகமாக இருக்கின்றது என ஸ்டாலின் சட்டமன்றத்துக்கு உள்ளே கொண்டு வந்து பேசினார். நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். எப்படி இருந்தாலும் சரி, யார் செய்தாலும் தப்பு என்கின்ற அடிப்படையில் அன்றைக்கு நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். அது போல் நீங்களும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுங்கள். சட்டமன்ற உறுப்பினருக்கு கடிதம் எழுத வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது ?

விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள், காவல்துறையை விட்டு முடுக்கி விடுங்கள், இது எல்லாம் அரசு செய்ய வேண்டிய ஒன்றுதானே, இதை செய்யாமல் எம்எல்ஏவுக்கு கடிதம் எழுதுகிறார். இதுபோல் நீங்கள் தான் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று, ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றால் யார் கஞ்சாவை வைத்திருக்கிறார்? எம்எல்ஏ வைத்திருக்கிறாரா? அப்போ அவரே சொல்லாமல் சொல்கிறார், தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் கஞ்சா கடத்துபவர்கள் என்று அவரே ஒத்துக் கொள்கிறார்.

ஆளுநரை பொறுத்தவரை இந்திய அரசியலமைப்பு சட்டம்படி தான் செய்லபட வேண்டும். அதற்க்கு அப்பாற்பட்டு இயங்க முடியாது. எல்லாரும் எல்லாம் சொல்லுவாங்க. ஆனால் அரசியலமைப்பு சட்டம்படி தான் நடக்க வேண்டும். ஆளுநரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம், பேசலாம். என்ன தப்பு இருக்கு ? அரசியலில் நாட்டுநடப்பு இருக்கலாம். நான் ரஜினிக்காக, ஆளுநருக்காக வக்காலத்து வாங்கவில்லை,

பொதுவாக பேசுகின்றேன். ரஜினி கட்சியை பற்றி பேசி இருந்தால் கருத்து சொல்லலாம். அவர் அப்படிசொல்லவில்லை, அரசியல் பேசினேன் என்று தான் சொன்னாரு ? அப்படியானால் என்ன வேண்டுமானாலும் பேசி இருக்கலாம். நாட்டுநடப்பு, தமிழ்நாடு நடப்பு, இந்திய நடப்பு, சமூகத்தை பற்றி பேசி இருக்கலாம். அது எனக்கு தெரியாது. நீங்கள் என்னிடம் கேட்கின்ற கேள்வியை ரஜினி சாரை நெஸ்ட் டைம் பார்த்தாக் கேளுங்க அவரு கிட்ட என தெரிவித்தார்.

Categories

Tech |