உச்ச நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Justice Sharad Arvind Bobde sworn in as the Chief Justice of the Supreme Court of India at Rashtrapati Bhavan today. pic.twitter.com/O4q0bzDuEx
— President of India (@rashtrapatibhvn) November 18, 2019