நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 198 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி
முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்தது. இருந்தார்.இதன்பிறகு விளையாடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்தது.இதில் அதிகபட்சமாக கிராண்ட் ஹோம் 120 ரன்னுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் ரபாடா 5 விக்கெட், ஜேன்சன் 4 விக்கெட் கைப்பற்றினர்.
இதனால் 71 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.நியூசிலாந்து சார்பில் சவுத்தி, ஹென்றி, ஜேமிசன், வாக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.இதையடுத்து 426 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதில் அதிகபட்சமாக டேவன் கான்வே பொறுப்புடன் ஆடி 92 ரன்னும், பிளெண்டல் 44 ரன்னும் எடுத்தனர்.இறுதியாக நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்தது .இதனால் 198 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி 1-1 என தொடரை சமன் செய்தது.