Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சபாஷ் நண்பா, அப்படி வாங்க… இது தான் தனி வழி ….. கைகோர்த்த கமல் …!!

டெல்லி வன்முறை குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கு கமல் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில்  நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , டெல்லி வன்முறைக்கு  மத்திய அரசு உளவுத்துறையின் தோல்வியே காரணம்.நான் பாஜகவில் ஊதுகுழல் என்கிறார்கள். மதத்தை வைத்து அரசியல் செய்வது வன்மையாக கண்டிக்கின்றேன். அறவழியில் போராடலாம் , ஆனால் போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது .வன்முறையை ஒடுக்கவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் பாஜகவை கண்டித்து பேசியுள்ளார்.

நடிகர் ரஜினியின் இந்த கருத்து பல்வேறு விவாதப்பொருளை எழுப்பியுள்ளது. ரஜினியின் கருத்து குறித்து ட்வீட்டரில் கருத்து பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் , சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துக்கள். என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |