Categories
உலக செய்திகள்

‘என்றும் இளமையுடன்’…. சாகாவரம் குறித்து ஆராய்ச்சி…. முதலீடு செய்த அமேசான் நிறுவனர்….!!

சாகாவரம் குறித்து ஆராய்ச்சி நடத்துவதற்காக பல கோடிகளை அமேசான் நிறுவனர் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புராணக் காலத்திலேயே மன்னர்கள் மரணத்தை தழுவக் கூடாது என்பதற்காக சாகாவரம்  பூஜைகளை நடத்தியதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த சாகாவரம் குறித்து தற்பொழுதும் பல்வேறு நாடுகள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். ஆனால் அப்படி ஒரு இலக்கை இதுவரை மனித சமூகம் எட்டவில்லை என்பதுதான் நிதர்சனம். மேலும் பல்வேறு நாடுகளில் உள்ள பணக்காரர்களும் கோடிக்கணக்கில் முதலீடு செய்து இது குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது அமேசான் நிறுவனரான Jeff Bezos சாகாவரம் குறித்த ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார். இதற்காக அவர் அமெரிக்காவில் உள்ள முன்னணி ஆராய்ச்சி நிறுவனமான அட்லாஸ் லேப்ஸில் பல கோடிகளை முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

குறிப்பாக அவர் முதலீடு செய்த தொகை எவ்வளவு என்று தெரியவில்லை. இருப்பினும் அதன் மதிப்பானது அட்லாஸ் லேப்ஸ் நிறுவனத்தின் மதிப்பிற்கு பாதிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனம் சாகாவரம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அதாவது, மனிதன் எப்பொழுதும் இறக்காமல் இளமையாக இருப்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். பொதுவாக மனித உடலில் இருக்கும் செல்கள் வளர்ந்து பெரிதாகி அவை இறந்து போகும் தன்மை உடையவை. இது சுழற்சி முறையில் நடந்து கொண்டே இருக்கும். இதனால்  உடலில் பல்வேறு வகையான மாற்றங்கள் ஏற்படும். மேலும் மனிதனின் வயது அதிகரிக்கும் போது செல்கள் வயதாகி இறக்கின்றனர்.

இதனால் மனிதனுக்கு முதுமை ஏற்படுகிறது. இந்த செயல்களை நடக்கவிடாமல் அதாவது, செல்களை இளமையாக  வைத்திருந்தால் எவ்வாறு இருக்கும். அதிலும் முதிர்ச்சியடைந்த செல்களை மீண்டும் அதன் ஆரம்ப நிலையான எம்பிரியோ என்னும் இடத்திற்கு கொண்டு சென்றால் எப்படி இருக்கும். இந்த மாதிரியான முதிர்ச்சியடைந்த செல்களை ஊக்குவித்தால் நாமும் இளமையாக வாழமுடியும். ஆனால் அவ்வாறு கொண்டு செல்வது எளிதான காரியமல்ல. இதனை சாதிப்பது மிகவும் கடினமான செயலாகும். இதற்கு முதலில் விலங்குகளின் செல்களை மறு உருவாக்கம் செய்ய வேண்டும்.

அந்த ஆராய்ச்சியில் பின் விளைவுகள் ஏதும் இல்லையெனில் மட்டுமே மனித உடலில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். இந்த ஆராய்ச்சியை தான் அட்லாஸ் லேப்ஸ் நிறுவனம் மேற்கொள்ளப் போகிறது. ஏற்கனவே அவர் யூனிட்டி டெக்னலாஜி நிறுவனத்தில் இதே போன்று சாகாவரம் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக பல கோடிகளை முதலீடு செய்துள்ளார். அந்த ஆராய்ச்சியும் தனியாக ஒரு பக்கம் நடந்து கொண்டு வருகிறது. அதிலும் கடந்த மாதம் வெளிவந்த தகவலின் படி உலக பணக்காரர்களில் பட்டியலில் அமேசான் நிறுவனரான Jeff Bezos 193.8 பில்லியன் அமெரிக்கா டாலர்களுடன்  இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |