மலையாள படத்தில் அறிமுகமாகி அனைவரது மத்தியிலும் மிகவும் பிரபலமான சாய்பல்லவிக்கு 2 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
முதல் முறையாக மலையாளப் படமான பிரேம்மத்தில் அறிமுகமாகி அனைவரிடத்திலும் நீங்காத இடத்தை பிடித்தவராக சாய்பல்லவி திகழ்கிறார். இதனையடுத்து இவர் தமிழ் திரையுலகில் மிகவும் முக்கியமான பிரபலங்களுடன் நடித்துள்ளார். அதாவது தனுசுடன் மாரி 2 மற்றும் சூர்யாவுடன் என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்த இரு படங்களுமே சாய்பல்லவிக்கு தமிழ் திரையுலகில் மிகுந்த வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. அதன்பின் இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தற்போது சுமார் 2 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையுலகில் மீண்டும் தன்னுடைய காலடியை சாய்பல்லவி எடுத்து வைக்கவுள்ளார்.
இவர் மீண்டும் நடிக்க உள்ள அந்த தமிழ் திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் இவருடன் இணைந்து நடிக்கவுள்ள சக நடிகர்கள் குறித்த தகவல் கூடிய விரைவில் வெளியாகவுள்ளது.