வரலட்சுமி சரத்குமார் ஹூரோயினியாக நடிக்கும் புது திரைப்படம் பற்றி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பல்வேறு விருதுகளை வென்ற அமுதவாணன் இயக்கத்தில் வரலட்சுமி நாயகியாக நடிக்கும் வி3 திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியது. இவற்றில் வரலட்சுமி மாவட்ட ஆட்சியராக நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வி3 என்பது அநீதிக்கு எதிராக போராடும் கதைக்களம் ஆகும்.
ஹைதராபாத், உத்திரப்பிரதேசம், காஷ்மீர் போன்ற இடங்களில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் வி3. மேலும் பாலியல் ரீதியான குற்றங்களுக்கான தீர்வை முன்வைக்கும் படமாகவும் இது இருக்கும் என இயக்குநர் தெரிவித்துள்ளார். முதலாவதாக இப்படத்தில் சாய்பல்லவி நடிக்க வேண்டியது இருந்ததாகவும், பின்னர் தேதி காரணமாக அவர் கால்சீட் கிடைக்காமல் வரலட்சுமி தேர்வானதாகவும் கூறப்படுகிறது.