Categories
உலக செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்….தாக்குதல் நடத்திய தலீபான்கள்…. வைரலான வீடியோ காட்சி….!!

சாலையில் ஊர்வலமாக சென்ற பெண்களை தலீபான்கள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அடித்து விரட்டும் வீடியோ காட்சியானது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்கள் முழுவதுமாக கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகள்  பறிக்கப்படும் என்ற பயவுணர்வு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று காபூலில்  பெண்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் சாலையில் ஊர்வலமாக சென்ற பெண்களை  தலீபான்கள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அடித்து விரட்டும்  வீடியோ காட்சியானது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

அதில் பெண்கள் தங்களின் சுதந்திரம் மற்றும் உரிமைக்காகப் போராடுகின்றனர். மேலும் அவர்கள் கையில் வாசகங்களை ஏந்திய படி கோஷமிட்டுள்ளனர். அப்பொழுது தலீபான்கள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பெண்களை பிரம்பால் அடித்து விரட்டியுள்ளார். இதனை கண்ட பிற பெண்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடியுள்ளனர். அதிலும் நாங்கள் பழைய மாதிரியாக இல்லை மாறிவிட்டோம். குறிப்பாக பெண்களுக்கு ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் உரிமைகள் வழங்கப்படும் என்று தலீபான்கள் கூறினர். ஆனால் தற்பொழுதோ அவர்களின் உண்மை முகத்தை உலகிற்கு காட்டியுள்ளனர் என்று சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |