அடையாளம் தெரியாத முதியவர் பிணம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் உடலை உடனடியாக கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முதியவரின் பெயர், விவரம் குறித்து தெரியவில்லை. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் இறந்த முதியவர் திருப்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் மேலும் அவர் பெயர் சத்தியமூர்த்தி என்பதும், ஊர் சேலம் என்பதும் தெரிய வந்துள்ளது. எனவே அவர் சேலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என கருதுகின்றனர். மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்தும் அவரது உறவினர் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.