இனிப்பு வகைகளில் கேசரி அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். அதையும் வித்யாசமாகவும் ஆரோக்கியமாகவும் செய்ய வேண்டுமென்றால்…..
ஆரோக்கியம் நிறைந்த சாமை அரிசியில் கேசரி செய்வது பற்றி பார்க்கலாம்….
தேவையான பொருட்கள்:
சாமை அரிசி : 2 கிண்ணம்
கருப்பட்டி : 1 கிண்ணம்
நெய் : 4 மேசைக்கரண்டி
முந்திரி : தேவைக்கேற்ப
திராட்சை : தேவைக்கேற்ப
மாம்பழம் : 1 கிண்ணம்
செய்முறை:
முதலில் இரண்டு கிண்ணம் சாமையை ஆறு கிண்ணம் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
முந்திரி மற்றும் திராட்சையை நெய்யில் போட்டு வருது வைக்கவும்.
சாமை வெந்ததும் கருப்பட்டியை சேர்க்கவும்.
அதனுடன் வருது வைத்துள்ள முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து நெய் ஊற்றி கிளறவும்.
பின்னர் பாதி மாம்பழ துண்டுகளை சேர்த்து கிளறி சிறுது நேரம் குறைந்த தீயில் வைக்கவும்.
இறுதியாக இறக்கிவிட்டு மீதம் உள்ள மாம்பழ துண்டுகளை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
சூடான சாமை மாம்பழ கேசரி தயார்.