Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தகாறில் உடைக்கப்பட்ட சாமி சிலை…. பொதுமக்கள் அளித்த புகார்…. வாலிபர் கைது….!!

சாமி சிலையை உடைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியில் மதுரை வீரன் பட்டத்தரசி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலின் முன்பாக வெங்கல்லிலான மகாமுனி சிலை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மதுரைவீரன் கோவில் பகுதியில் அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் மதுபானம் அருந்துதல் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவர்களை எச்சரித்தும் நிறுத்தவில்லை. கடந்த 6-ஆம் தேதி கோவில் அருகில் சில இளைஞர்கள் மதுபானம் அருந்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனர்.

இதில் திடீரென அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு கோவிலில் வைக்கப்பட்டிருந்த மகாமுனி சிலையை உடைத்தனர். இதனை அறிந்த பொதுமக்கள் அந்தச் சிலையை தேடியபோது கிடைக்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் காமநாயக்கன்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி சாமி சிலையை உடைத்து கிணற்றில் வீசிய அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |