சார்ஜாவில் மலிகா மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சியின் போது தவறி விழுந்த சுற்றுலா பயணியை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த 3 பேர் மலைப்பகுதியை ஏறும் பயிற்சியை சார்ஜா மலிகா மலைப்பகுதியில் மேற்கொண்டிருந்தபோது மூவரும் வெற்றிகரமாக உச்சியை சென்றடைந்தனர். அப்போது திடீரென இத்தாலியை சேர்ந்த பயணி ஒருவர் துரதிர்ஷ்டவசமாக மலையிலிருந்து தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்திருப்பத்தை இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற இரு பயணிகளும் அவரை மீட்க போராடினர் ஆனால் அவர்களால் மீட்க முடியாத காரணத்தினால் காவல்துறையின் உதவியை நாடியுள்ளனர் .
அதன்பிறகு போலீஸ் ஹெலிகாப்டரின் மூலம் சம்பவ இடத்திற்கு வந்து கீழே தவறி விழுந்த இத்தாலி நாட்டு பயணியை காப்பாற்றி அங்குள்ள அல் தைத் என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அந்தப் பயணி தனது சுயநினைவை இழந்தாக தெரிவித்தார். ஆகையால் இதனை குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.