Categories
மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் கொலை வழக்கு: வியாபாரிகள் உட்பட 9 பேரிடம் விசாரணை…!!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட 9 பேரிடம் சிபிஐ அதிகாரிகள்  விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்ததை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பெயரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளராக ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை  உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இரட்டை கொலை வழக்கில் அரசு பரிந்துரையை ஏற்று சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

டெல்லி சிபிஐ கூடுதல் எஸ்பி விஜயகுமார், சுக்குலா தலைமையிலான அதிகாரிகள் கடந்த 31ஆம் தேதி திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் ஜெயராஜ் உறவினர் பெண் தலைமை காவலர் பியூலாவிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சாத்தான்குளத்தில் உள்ள மாதா கோவில் தெருவில் பெனிக்ஸ் கடை அருகே கடை நடத்தி வருபவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட 9 பேரிடம்  விசாரணை நடத்தினர்.

Categories

Tech |