இடுப்பில் செருப்போடும், தலையில் மங்கி குல்லாவோடும் திருடிய டவுசர் பாண்டீஸ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி அடுத்த ஆரோவில் உள்ள பகுதியில் தனியாக இருக்கும் பங்களா வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கொள்ளை அடித்ததாக புகார் வந்துள்ளது. இதையடுத்து கடந்த வாரம் திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள சசிகுமாரின் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த டவுசர் கொள்ளை கத்தியை காட்டி மிரட்டி சசிகுமாரின் தாய் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி மற்றும் அவருடைய வீட்டில் இருந்து 39 சவரன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். அதையடுத்து சசிக்குமார் அளித்த புகாரில் ஆரோவில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து திருட்டு நடந்த பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில் சந்தேகத்தின் அடிப்படையில் ஆரோவில் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஈடுபட முயன்ற பாலமுருகன் என்பவரை கைது செய்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் தான் அந்த பகுதியில் ஒரு வருடமாக திருடியதாக ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து பாலகிருஷ்ணன் நகைகளை விற்று கொடுக்க ஆறுமுகம் என்பவர் உதவியாக இருந்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் இரவு நேரத்தில் சவுக்குத் தோப்பில் உடைகளை கழற்றி வைத்துவிட்டு டவுசர் மற்றும் சட்டையை அணிந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்து கதவை பூட்டிவிட்டு பின்பக்க கதவை உடைத்து திருடி செல்வதாக தெரிவித்துள்ளனர். இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் 75 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஏற்கனவே தமிழம் பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது. செருப்பு இடுப்பிலும், சட்டையும் வேட்டியும் கழற்றி விட்டு கையில் கத்தியுடன் வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.