Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அங்கு போக கூடாது…. சாபம் கொடுத்த சாமியார்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

சுற்றுலாதலத்திற்கு செல்வதற்கு தடை விதித்ததால் சாமியார் காவல்துறையினருக்கு சாபம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. இதனையடுத்து கொரோனா படிப்படியாக குறைந்து வந்த நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து பல்வேறு சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டது. ஆனால் ஒகேனக்கல் சுற்றுலா தலம் திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனால் பயணிகள் இன்றி சுற்றுலாத்தலம் வெறிச்சோடி காணப்படுகிறது. அதன்பின் விதிக்கப்பட்ட தடையை மீறி ஒகேனக்கலுக்கு பயணிகள் வாகனங்களில் வரும்போது அவர்களை மடம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பினர்.

ஆனாலும் ஒரு சில சுற்றுலா பயணிகள் எங்களை ஒகேனக்கல்லுக்கு செல்வதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மடம் சோதனைச் சாவடியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருக்கும்போது சுற்றுலாத் தலத்திற்கு காரில் தர்மபுரியை சேர்ந்த சாமியார் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்தக் காரை காவல்துறையினர் நிறுத்தி அங்கு செல்ல அனுமதி இல்லை என்று சாமியாரிடம் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த அவர் ஒகேனக்கல்லுக்கு செல்வதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனினும் சாமியார் அங்கு செல்வதற்கு காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக அவர் நடுரோட்டில் உருண்டு காவல்துறையினரின் குடும்பம் இன்னும் 6 மாதத்தில் அழிந்து போய்விடும் என சாபம் விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

Categories

Tech |