சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் 16ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா ஊரடங்கால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மார்ச் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. மத்திய அரசு சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்ததைத் தொடர்ந்து வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி சபரி மலையிலும் நவம்பரில் தொடங்கும் மண்டல பூஜைக்கு தினமும் ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது.
இதற்கு முன்பாக சோதனை அடிப்படையில் வரும் 16ஆம் தேதி முதல் தொடங்க உள்ள ஐப்பசி மாத பூஜைகளின் போது பக்தர்களை அனுமதிக்க முதல்வர் திரு பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தினமும் 250 பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.