Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களே…” இது கட்டாயம் வேணும்”… இல்லைனா கோயிலுக்கு NO பர்மிஷன்..!!

சபரி மலைக்கு வரும் பக்தர்கள் இன்று முதல் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்று தேவஸ்தான போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருவோர் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என திருவாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் கோயிலுக்கு வருவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா சான்றுகளை கட்டாயமாக கொண்டுவர வேண்டுமென தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தான போர்டு தலைவரின் வாசு கூறியதாவது: “டிசம்பர் 31 முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளதால், இதை கருத்தில் கொண்டு கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாதவர்கள் மலை ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ளனர்.

மண்டல பூஜை இன்று நடைபெற இருக்கிறது. இதன் பின் கோயில் சாத்தப்பட்டு மீண்டும் டிசம்பர் 31ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்கு நடை திறக்கப்படும். தினசரி 5000 பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஆன்லைனில் கோயிலுக்கு வருவதற்கு முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். அனைத்து பக்தர்களும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். 6 அடி இடைவெளி விட்டு, முக கவசம் அணிந்து வரவேண்டும். பக்தர்கள் மட்டுமில்லாமல் சபரிமலையில் பணியில் இருக்கும் அதிகாரிகள் கொரோனா பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். கேரள அரசு சபரிமலையில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஜனவரி 20 முதல் கோயில் மூடப்படும்.கொரோனா ஆரம்பித்த பிறகு இதுவே முதல் சபரிமலை சீசன் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |