சபரிமலையில் கொரோனா பரிசோதனை கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த பக்தர்களுக்கு அமைச்சர் உதயகுமார் உதவினார்.
சபரிமலையில் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர் .இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த பக்தர்கள் சபரிமலைக்கு விரதமிருந்து சென்றுள்ளனர். அப்போது அங்கு எரிமேலியில் கொரோனா பரிசோதனைக்காக ஒருவருக்கு 2500 ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஆனால் பரிசோதனை கட்டணம் இல்லாமல் 10 பக்தர்கள் கவலையில் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.
அந்நேரத்தில் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக அமைச்சர் ஆர். பி. உதயகுமார் வந்துள்ளார். அங்கு மதுரையிலிருந்து வந்த பக்தர்களிடம் கொரோனா பரிசோதனை கட்டணம் இல்லாததை தெரிந்து கொண்டார். அதன்பின் பணம் இல்லாது இருந்த 10 பக்தர்களுக்கு அமைச்சர் கொரோனா பரிசோதனை கட்டணமான ஒருவருக்கு 2500 வீதம் பத்துப் பேருக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அதன்பின் அவர் சபரிமலைக்கு புறப்பட்டு சென்று விட்டார்.பக்தர்கள் அவருக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளை கூறினர்.