Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

ரூ.25 லட்சம் கொரோனா நிதியுதவி அளித்த சச்சின் …. மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என வேண்டுகோள்! 

இந்தியாவில் கொரோனோ வைரஸால் 170க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 11ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசின் உத்தரவை ஏற்று அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர் உலகெங்கிலும் சுகாதர வல்லுனர்கள் வீட்டிலேயே இருக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் வீட்டில் இருக்காமல் வெளியில் சென்று கிரிக்கெட் விளையாடி கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது என கூறியுள்ளார்.

மக்கள் ஒரு ஆக்சிஜன், கொரோனா ஒரு நெருப்பு எனவும் ஒப்பிட்ட சச்சின் வைரஸ் மேலும் பரவாமல் இருக்க மக்கள் வெளியே செல்லாதீர்கள் என கூறியுள்ளார். 10 நாட்களுக்கு மேலாக தன்னை தனிமைப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மக்களை வெளியே செல்ல இது விடுமுறை அல்ல, அதனால் தயவுசெய்து வீட்டை விட்டு வெளிேய செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். அதுமட்டுமின்றி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சச்சின் டெண்டுல்கர் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |