Categories
கிரிக்கெட் விளையாட்டு

இளசுகளே மண்ட பத்திரம்…. கவனமா விளையாடுங்க…. அறிவுரை சொன்ன சச்சின் …!!

இளசுகளே மண்ட பத்திரம் என்று சச்சின் தெண்டுல்கர் இளம் வீரர்களுக்கு அறிவுரை கொடுக்கும் வகையில் ட்விட் செய்துள்ளார்.

கடந்த 24 ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியை சச்சின் டெண்டுல்கர் சுட்டிக்காட்டி ஒரு விழிப்புணர்வு பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிய அந்தப் போட்டியை சச்சின் இதில் சுட்டி காட்டி இளம் வீரர்களுக்கு அறிவுரை கொடுத்துள்ளார். சச்சினின் ட்விட்டர் பதிவில், போட்டி வேகமாகிவிட்டது, ஆனால் பாதுகாப்பானதாக உள்ளதா? சமீபத்தில் இதற்கு ஒரு சாட்சி நம் கண் முன்னே நிகழ்ந்தது. வேகப்பந்து அல்லது சுழற்பந்து எதுவானாலும் தொழில்முறை ரீதியாக அணுகி பேஸ்ட்மேன்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு டேக் செய்து ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ள சச்சின், இந்த நேரத்தில் நான் உங்களுக்கு ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் திரு. கவாஸ்கர் வீசிய புல் டாஸ் பந்து உங்களின் முகத்தை தாக்கியது. ஆனாலும் அதிருஷ்டவசமாக பெரிய காயம் ஏற்படவில்லை என  தெரிவித்திருந்தார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில் ரன் எடுக்கும் முயற்சியில் விஜயசங்கர் எல்லைக் கோட்டை நோக்கி ஓடும் போது நிக்கோலஸ் பூரன் வீசிய பந்து முகத்தை தாக்கியதை நினைவுகூர்ந்து சச்சின் டெண்டுல்கர் இளம் வீரர்களுக்கு அறிவுரையை கொடுத்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் கடந்த 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் பில்கிஸ், வேகப்பந்து வீச்சாளர் சீன்  அபோர்ட் வீசிய பந்து தாக்கியதில் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டு நரம்புகள் சிதைந்து,  மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |